Kathir News
Begin typing your search above and press return to search.

வேகமாக பரவும் கொரோனா: சென்னை பல்கலையில் செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்திருப்பதாக பெற்றோர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

வேகமாக பரவும் கொரோனா: சென்னை பல்கலையில் செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பா?

ThangaveluBy : Thangavelu

  |  9 Jan 2022 6:09 AM GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்திருப்பதாக பெற்றோர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 21ம் தேதி முதல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வுகள் மீண்டும் எப்போது நடத்தப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News