Kathir News
Begin typing your search above and press return to search.

செஞ்சி குடவரை கோயிலை வெடிவைத்து தகர்க்க தயாராகிய அமைச்சர் மஸ்தான்: கொதிக்கும் இந்துக்கள் !

செஞ்சி குடவரை கோயிலுக்கு பாதை அமைப்பதாக கூறி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் பாறைகளை வெடிவைத்து தகர்க்க உத்தரவு பிறப்பித்துள்ளாராம். இதனால் அந்தக் கோயில் எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற அச்சத்தில் பக்தர்கள் உள்ளனர்.

செஞ்சி குடவரை கோயிலை வெடிவைத்து தகர்க்க தயாராகிய அமைச்சர் மஸ்தான்: கொதிக்கும் இந்துக்கள் !
X

ThangaveluBy : Thangavelu

  |  20 Nov 2021 2:38 AM GMT

செஞ்சி குடவரை கோயிலுக்கு பாதை அமைப்பதாக கூறி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் பாறைகளை வெடிவைத்து தகர்க்க உத்தரவு பிறப்பித்துள்ளாராம். இதனால் அந்தக் கோயில் எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற அச்சத்தில் பக்தர்கள் உள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சிங்கவரம் என்ற ஊரில் குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை ''அரங்கநாதன் குடைவரைக்'' கோயில் எனவும் அழைப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலின் சிறப்புகளை பார்ப்போம். மண்டபத்தில் இரண்டு வரிசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு முழுத்தூண்களும், பக்கச் சுவர்களோடு ஒட்டியவாறு இரண்டு அரைத்தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் மேலும், கீழும் சதுர வெட்டுமுகத்துடனும், நடுப்பகுதி எண்பட்டை வடிவிலும் அமைந்துள்ளன.


இத்தூண்களில் தாமரைச் சிற்ப வடிவங்கள் உள்ளன. இவற்றின் மேல் போதிகை, உத்தரம் ஆகிய உறுப்புகளும் காணப்படுகின்றன. தூண் வரிசைக்கு இருபுறமும் முகப்புக் பகுதியில் வாயிற்காவலர் சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் பின்புறம் அதன் முழு அகலத்துக்குக் கருவறை உள்ளது. இக்கருவறையுள் கிடந்த நிலையில் திருமாலின் உருவம் ''பள்ளிகொண்ட பெருமான்'' வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. மேலும், இக்குடைவரையில் உள்ள வாயிற்காவலர் சிற்பங்கள் போன்றவை மகேந்திரவர்மன் காலத்தவை சேர்ந்தவை ஆகும். சிங்கவரம் (சிங்கபுரம்) சிம்மவிட்டுணு காலத்தில் குடையப்பட்டது என்றும் கருதுகிறார். எனினும் இது பரமேசுவரவர்மன் காலத்தைச் சேர்ந்தது எனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், இந்த சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு பல ஆயிரம் பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இக்கோயிலுக்கு செல்வதற்கு பாதை அமைப்பதாக கூறி தற்போது தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் வெடிவைத்து பாறைகளை அப்புறப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக குடவரைக் கோயில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து தரைமட்டமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கோயிலுக்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதாக கூறி தற்போது ஒரு கோயிலை இடித்து தரைமட்டமாக்கும் அமைச்சர் மஸ்தானுக்கு இந்துக்கள் அனைவரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். உடனடியாக கோயில் இடிந்து விழாமல் சரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஒட்டுமொத்த செஞ்சி மக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல கோயில்களில் பூஜைகள் கூட நடைபெறாமல் இருக்கிறது. சில இடங்களில் கோயில்களை மறைமுகமாக அழிக்கும் வேளைகளை இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டிருப்பதாக பொதுமக்கள் குற்றமச்சாட்டி வருவதையும் பார்க்க முடிகிறது. இது போன்ற நடவடிக்கைகளை இந்து மக்கள் ஒருபோதும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்பதும் நிதர்ஷமான உண்மையும் ஆகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News