சென்னை: ஜெபம் செய்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மபோதகர் கைது.!
ஆவடியில் சர்ச்சிக்கு வந்த பெண்ணை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த மதபோதகரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu
சென்னை, ஆவடியில் சர்ச்சிக்கு வந்த பெண்ணை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த மதபோதகரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஆவடி நியு காலனியை சேர்ந்தவர் ஸ்கார் டேவிட் 53, இவர் ஒரு மதபோதகர். இவர் அப்பகுதியில் உள்ள சர்ச்சில் ஜெபம் நடத்தி மதபோதனை செய்து வருகிறார். பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறி வீடுகளுக்கே சென்று ஜெபம் நடத்தி வந்துள்ளார். அது போன்று செல்லும்போது பெண்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆவடி, ஆரிக்கமேடு பகுதியில் வசிப்பவர் ஏஞ்சலின் 42, இவர் ஜெபம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது ஸ்கார் டேவிட், ஏஞ்சலினை சர்ச்சில் வந்து ஜெபம் செய்யுமாறு கூறியுள்ளார். இதனை நம்பி கடந்த 17ம் தேதி சர்ச்சில் ஏஞ்சலின் ஜெபம் செய்துள்ளார். அப்போது மதபோதகம் ஸ்காட் டேவிட் ஏஞ்சலினை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஏஞ்சலின் அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடி வந்துள்ளார். ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து நேற்று மதபோதகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது போன்று பல்வேறு மதபோதகர் இதே போன்றுதான் சுற்றித்திரிந்து வருகின்றனர். ஜெபம் செய்வதாக கூறி பல்வேறு அப்பாவி பெண்களை நாசம் செய்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.