Kathir News
Begin typing your search above and press return to search.

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை கொன்ற இளைஞருக்கு நீதிமன்றம் அளித்த முறையான தண்டனை

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமையை கொன்ற வட மாநில வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை.

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை கொன்ற இளைஞருக்கு நீதிமன்றம் அளித்த முறையான தண்டனை
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 Sept 2022 8:03 AM IST

எட்டு வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வட மாநில வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போகோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 8 வயது சிறுமி கடந்த 2020 ஜனவரி 20ஆம் தேதி தனது வீட்டில் இருந்து வெளியே சென்றாள். மீண்டும் அந்த சிறுமி வீட்டிற்கு திரும்பவில்லை. இதை எடுத்து அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.


இந்நிலையில் மறுநாள் அங்குள்ள காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்திய பொழுது சிறுமி கடத்திக் கொள்ளப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்பதும் உறுதியானது. இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக, சிவகாசி போலீசார் வழக்கு பதிவு செய்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அலி குறித்து விசாரணையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


இது குறித்து வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஸ்போர்ட்ஸ்கோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்த மற்றும் அலிக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Input & Image courtesy: Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News