Kathir News
Begin typing your search above and press return to search.

பாராட்டு மழையுடன் B.L.சந்தோஷ் வெளியிட்ட S.G.சூர்யா எழுதிய "வீர சாவர்க்கர் - ஒரு கலகக்காரனின் கதை" நூலின் அட்டைப்படம்! சுவாரஸ்ய தகவல்

பாராட்டு மழையுடன் B.L.சந்தோஷ் வெளியிட்ட S.G.சூர்யா எழுதிய வீர சாவர்க்கர் - ஒரு கலகக்காரனின் கதை நூலின் அட்டைப்படம்! சுவாரஸ்ய தகவல்
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 May 2022 8:41 AM IST

மே 28, 2022, வீர சாவர்க்கரின் 139-வது பிறந்த தினம். பிரிட்டிஷ் அரசின் கண்களில் விரலைவிட்டு ஆட்டியவர். சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர். பிறவிப் போராளி. பயம் என்ற வார்த்தையை அறியாதவர்.

பிரிட்டிஷ் அரசு அவருக்கு 31 ஜனவரி, 1911-ம் ஆண்டு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. அவர் ஐம்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் ஒரு நபருக்கு இரண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது சாவர்க்கருக்கு மட்டுமே. மற்றவர்கள் துவண்டபோது தைரியமாக எதிர்கொண்டார் சாவர்க்கர்.

குழந்தைப் பருவம் முதல், உயிர் பிரியும் தருவாய் வரை போராடியவர் சாவர்க்கர். தன்னுடைய உழைப்பை பிறர் அபகரித்தபோதும் அதைக் கண்டு வருத்தப்படாதவர். சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்ததில் பெரும்பங்கு சாவர்க்கருக்கு உண்டு. ஆனால், பதவியையும், பெருமையையும் காங்கிரஸ் வளைத்துப் போட்டது.அந்தமான் செல்லுலார் சிறையில் சாவர்க்கருக்கு அளிக்கப்பட்ட தண்டனை, சிறையின் சரித்திரத்தில் எந்த ஒரு கைதிக்கும் அளிக்கப்பட்டிருக்காது. மனிதாபிமானமற்ற கொடுமைகள் அவை.

சாவர்க்கரின் நினைவாக, அந்தமான் விமான நிலையத்திற்கு வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம் என்று பெயரிட்டது, அவரது தியாகங்களுக்கு கிடைத்த ஒரே அங்கீகாரம்.

அவருடைய நினைவை போற்றும் விதமாக தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா "வீர சாவர்க்கர் - ஒரு கலகக்காரனின் கதை" என்ற புத்தகத்தை வெளியிட உள்ளார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு முகப்பு அட்டைப்படம் வெளியிடப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News