சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் பயிற்சியின் போது தவறுதலாக சிறுவன் மீது பாய்ந்த தோட்டா!
புதுக்கோட்டை மாவட்டம், பசுமலைப்பட்டியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இங்கு மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
By : Thangavelu

அதே போன்று இன்று (டிசம்பர் 30) துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது பயிற்சியிலிருந்த வீரர் ஒருவர் சுட்ட தோட்டா அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதியில் பாய்ந்துள்ளது. அப்போது அங்கு வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் மீது பாய்ந்துள்ளது. இதனால் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுவனை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிறுவன் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சி, புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Source, Image Courtesy: Vikatan