பிரம்ம முகூர்த்த நேரத்தில் 'ஈஸ்வரன்' டீசர் - பெரியாரியவாதிகள் வாயில் பட்டாசை கொளுத்தி போட்ட சிம்பு.!
பிரம்ம முகூர்த்த நேரத்தில் 'ஈஸ்வரன்' டீசர் - பெரியாரியவாதிகள் வாயில் பட்டாசை கொளுத்தி போட்ட சிம்பு.!
By : Mohan Raj
திரையுலகில் பெரியாரிச கொள்கை பேசி அதில் பிழைப்பு ஓட்டி, அதனை வைத்து அரசியலிலும் பிழைப்பை ஓட்டி மக்களை ஏமாற்றி வயிற்றில் அடித்த காலம் மலையேற துவங்கிவிட்டது. இனி 'பெரியாரிசம்' பேசுவது பிழைப்பிற்கு ஆகாது என 'பெரியாரிசத்தை பேசியவர்கள்' மட்டுமல்ல 'பெரியார் குத்து' பாடியவர்கள் கூட உணர்ந்துவிட்டனர்.
அந்த வகையில் நடிகர் சிலம்பரசன் தன் திரையுலக பயணத்தில் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி இதர பிற செயல்களிலும் ஆர்வம் செலுத்தி வந்தார். பாடல்கள் பாடுவது, இசையமைப்பது, இயக்கம் என பிற வேலைகளில். அது போலவே சில ஆண்டுகள் முன்பு "பெரியார் குத்து" என்ற பாடலை இணையத்தில் வெளியிட்டார். கருப்பு சட்டை அணிந்து 'ஈ.வே.ராமசாமியை புகழ்ந்து அந்த பாடல் வெளியானது. திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க'வினர் எல்லாம் 'சிலம்பரசனை போற்றி புகழ்ந்தனர்'.
அதே சிலம்பரசன் பட வாய்ப்புகள் குறைந்து கிட்டதட்ட திரையுலக அஸ்தமனம் வரை சென்ற பின் தானே உணர்ந்து இன்று தனது திரைப்பயணத்தை தொடர்ந்துள்ளார்.
'ஈஸ்வரன்' என்ற ஓர் பட அறிவிப்பு வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "நம்ம சிம்புவா இது" என அவரது ரசிகர்களே வாயடைத்து போகும் அளவிற்கு 'ஈஸ்வரன்' படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிற வைத்துள்ளன.
இந்த நிலையில் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'ஈஸ்வரன்' படத்தின் டீசர் எனப்படும் முன்னோட்டம் காலை 4:32 மணிக்கு வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் முக்கிய அம்சமாக "பிரம்ம முகூர்த்தம் 4:32 மணிக்கு" வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பில் தீபாவளி பட்டாசை கொளுத்தி வாயில் போட்ட மாதிரி "பெரியாரிய ஆதரவாளர்கள்" கதறுகின்றனர். ஏனெனில் இந்துக்களின் முறைப்படி "பிரம்ம முகூர்த்தம்" எனப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. காலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை உள்ள காலகட்டமே பிரம்ம முகூர்த்தம் ஆகும் வழக்கமாக இந்த நேரத்தில் துவங்கும் காரியங்கள் அமோக வெற்றி பெறும் அதிலும் தீபாவளி அன்று பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும் காரியங்கள் மிகவும் சிறப்பானதாக அமையும் என்பது இந்துக்கள் ஆன்மீகம். இப்படிபட்ட சிறப்பு வாய்ந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் சிம்பு அவர்களின் பட முன்னோட்ட வெளியீடு பல பெரியாரியவாதிகள் மத்தியில் கடுப்பை ஏற்றியுள்ளது.
பெரியாரிசமே பொய் எனற விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்பட்டு வரும் நிலையில் இப்படி பெரியாரிசத்தை பேசிய, பாடிய நபர்கள் மாறி வருவது பல பெரியாரியவாதிகள் பிழைப்பை நாசமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.