Kathir News
Begin typing your search above and press return to search.

பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த பாதிரியார் உட்பட 4 பேர் கைது.!

பிரபல பாடகியின் 15 வயது மகளை பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாதிரியார் உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த பாதிரியார் உட்பட 4 பேர் கைது.!
X

ThangaveluBy : Thangavelu

  |  24 April 2021 10:19 AM IST

சென்னையில், பிரபல பாடகியின் 15 வயது மகளை பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாதிரியார் உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகி ஒருவர். அவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். அவரை சென்னையில் உள்ள தங்கையின் பராமரிப்பில் விட்டு சென்றிருந்தார்.அப்போது 15 வயது மகளை உறவினர்கள் மூன்று பேரும், பாதிரியார் ஹென்றி என்பவரும் கடந்த 8 வருடங்களாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளதாக பாடகி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.இதனையடுத்து, கீழ்பாக்கம் மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த பாதிரியார் உட்பட 4 பேரும் தலைமறைவாகினர்.







இந்நிலையில், தலைமறைவாக இருந்த பாதிரியார் ஹென்றி, மற்றும் பாடகியின் சகோதரி, அவரது கணவர், உறவினர் ஒருவர் என 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். உறவினர்களே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News