Kathir News
Begin typing your search above and press return to search.

சிறுவாச்சூரில் சாமி சிலைகள் உடைக்கப்படுவதை தடுக்க, 6.80 லட்சம் ரூபாய் செலவில்,கம்பி வேலி அமைக்க கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு !

சிறுவாச்சூரில் சாமி சிலைகள் உடைக்கப்படுவதை தடுக்க,  6.80 லட்சம் ரூபாய் செலவில்,கம்பி வேலி அமைக்க கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு !
X

DhivakarBy : Dhivakar

  |  16 Nov 2021 12:22 PM GMT

சிறுவாச்சூரில் தொடர்ச்சியாக சுவாமி சிலைகள் உடைக்கப்படுவதை தொடர்ந்து ஆறு லட்சம் ரூபாய் செலவில் கோவிலை சுற்றி கம்பி வேலி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் திருவாச்சூரில் அக்டோபர் 6, 27 மற்றும் நவம்பர் 9 ஆகிய தேதிகளில், மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான பெரியசாமி, செங்கமலையார் கோவில், பெரியாண்டவர் கோவில், ஆத்தடி சித்தர் கோவில், பெருமாள் கோவில்களில் உள்ள 41 சுவாமி சிலைகள்,மர்ம நபரால் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.




இந்த சம்பவம் தமிழக இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிவு செய்தது , கடலுார் மாவட்டம், கால்நாட்டான் புலியூர் கிராமத்தை சேர்ந்த நாதன்,42, என்பவரை கைது செய்தனர்.

மர்ம கும்பல் தாக்குதலை தடுக்க செல்லியம்மன் வகையறா மக்கள் கோவிலை சுற்றி, 3.10 லட்சம் ரூபாய் மதிப்பிலும், செங்கமலையார் மற்றும் ஆத்தடி சித்தர் கோவிலை சுற்றி 3.70 லட்சம் ரூபாய் மதிப்பிலும் இரும்பு கம்பிகளால் பாதுகாப்பு வேலிகள் அமைப்பதற்கு, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் நிர்வாகத்தினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இத்திட்டத்தை அமல்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அனுமதிக்காக கோயில் நிர்வாகத்தினர் காத்துவருகின்றனர்.

இரும்பு கம்பிகளால் ஆன வேலிகள் சாமி சிலை தாக்குதலை தடுக்கும் என்று நாம் நம்பலாம். ஆனால் அந்த செய்யலை செய்ய தோன்றும் எண்ணங்களை என்ன செய்ய ???

Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News