வாடகை கொடுக்காமல் சட்டத்திற்கு புறம்பாக சர்ச்: சிவசேனா கடும் எதிர்ப்பு!
திருப்பூரில் வாடகைக் கட்டத்தில் ஒரு கிறிஸ்தவ சர்ச் செயல்பட்டு வருகிறது. அங்கு அடுத்தவர்களுக்கு தொல்லை கொடுக்கின்ற வகையில் சத்தம் அதிகமாக போட்டு பிரார்த்தனை கூட்டம் நடத்துவதாக சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
By : Thangavelu

இது பற்றி திருப்பூர் மாநகர காவல் துறைக்கு ஆன்லைன் வாயிலாக சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் அட்சயா திருமுருகதினேஷ் புகார் மனு ஒன்று அனுப்பியுள்ளார். அதில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வளர்மதி பேருந்து நிறுத்தம் அருகில் தனியாருக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது.
இதில் வாடகைக்கு கிறிஸ்தவ அமைப்பு எடுத்து அதில் பிரார்த்தனை கூட்டம் நடத்தப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசலும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி பகுதியில் எவ்வித அனுமதியும் இல்லாம் சட்டத்திற்கு புறம்மாக வாடகைக்கு எடுத்து சர்ச் நடத்தி வருகின்றனர். எனவே இது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவரது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
Source: Dinamani
Image Courtesy:Gallup News