Kathir News
Begin typing your search above and press return to search.

சந்தன மரம் கடத்தல், பத்திரிகையாளர்கள் சிறைபிடிப்பு - டானாக மாறி தெறிக்கவிடும் நாகர்கோயில் சி.எஸ்.ஐ பேராயர் செல்லப்பா

நாகர்கோயில் சி.எஸ்.ஐ பேராயர் வீட்டு வளாகத்தில் இருந்த சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக காவல்துறையிடம் வனத்துறை அதிகாரிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சந்தன மரம் கடத்தல், பத்திரிகையாளர்கள் சிறைபிடிப்பு - டானாக மாறி தெறிக்கவிடும் நாகர்கோயில் சி.எஸ்.ஐ பேராயர் செல்லப்பா
X

Mohan RajBy : Mohan Raj

  |  6 Nov 2022 4:47 PM IST

நாகர்கோயில் சி.எஸ்.ஐ பேராயர் வீட்டு வளாகத்தில் இருந்த சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக காவல்துறையிடம் வனத்துறை அதிகாரிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சி.எஸ்.ஐ பேராயர் ஆயர் இல்லத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு இருந்த நான்கு சந்தன மரங்களை ஆயர் செல்லப்பாவின் உதவியுடன் சிலர் வெட்டி செல்வதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக குமரி சி.எஸ்.ஐ பேராயர் சபையின் நிர்வாக குழுவினர்கள் எட்டு நபர்கள், உறுப்பினர் ஜெயக்குமார் ஆகிய தமிழக அரசின் தமிழை தலைமைச் செயலாளர், வனத்துறை செயலாளர் மாவட்ட வனத்துறை அதிகாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் ஆயர் வளாகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். வெட்டப்பட்ட சந்தன மரத்தின் மீதி உள்ள பகுதிகளை மறைத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர். மேலும் ஆயர் வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான சந்தன மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தன மரக் கடத்தல் குறித்து இதுவரையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறும் நிலையில் புகார் அளித்தவர்களிடம் விசாரணைக்காக மாவட்ட வன அதிகாரிகள் நேரில் சென்று புகார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை ஆயரின் உதவியாளர்கள் முன் வாசல் கேட்டை பூட்டி சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்ததும் செய்தியாளர்களை விடுவித்ததோடு தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து கொண்டனர். சந்தன மரக்கட்டைகளை வெட்டியது மற்றும் பதுக்கிய விவகாரம் அப்பகுதியில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.


Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News