ஓட்டலில் புகுந்த மலைப்பாம்பை கையில் பிடித்து நடனமாடிய போதை ஆசாமி.!
முட்டைக்காடு பகுதியில் ஒரு ஓட்டலில் பின்புறத்தில் விறகு கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஒரு மலைப்பாம்பு விறகு கட்டை நடுவில் புகுந்துள்ளது.

By : Thangavelu
கன்னியாகுமரி மாவட்டம், முட்டைக்காடு பகுதில் உள்ள ஒரு ஓட்டலில் புகுந்த மலை பாம்பை பிடித்து சாலையில் வந்து நடனம் ஆடிய போதை ஆசாமியால் அலறியடித்து ஓட்டம் பிடித்த பொதுமக்கள்.
கன்னியாகுமரி, முட்டைக்காடு பகுதியில் ஒரு ஓட்டலில் பின்புறத்தில் விறகு கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஒரு மலைப்பாம்பு விறகு கட்டை நடுவில் புகுந்துள்ளது. இது பற்றிய தகவல் ஓட்டல் பொதுமக்களுக்கு பரவ அந்த இடமே பரபரப்பாக காட்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அதே சாலை வழியாக சென்று கொண்டிருந்த அகஸ்டின் என்ற வாலிபர் மது போதையில், மலைப்பாம்பை கையில் பிடித்து தோளில் போட்டுக்கொண்டு நடனம் ஆடியுள்ளார். அந்த வழியே சென்றவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதன் பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போதை ஆசாமியிடம் இருந்து பாம்பை மீட்டு சென்றனர்.
