போலி செய்தி பரப்புவோருக்கு எச்சரிக்கை - தமிழக போலீஸ் துறையில் சமூக ஊடக குழு தொடக்கம்
வதந்தி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை தமிழக போலீஸ் துறையில் சமூக ஊடக குழு தொடக்கம். டி.ஜி.பி சைலேந்திரபாபு தகவல்

By : Karthiga
சமூகவலைதளங்களில் வதந்தி, அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தமிழக போலீஸ் துறையில் சமூக ஊடக கண்காணிப்பு குழு தொடங்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களின் வாழ்க்கை இன்று டிஜிட்டல் மயமாகி இருக்கிறது.மளிகை பொருட்கள் உட்பட அனைத்தையும் 'ஆன்லைன்' மூலம் வாங்கும் வசதி இருப்பதனால் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் செல்போன்கள் தவழ்கின்றன.
செல்போன் நிறுவனங்களும் அலைவரிசை சலுகையை வாரி வழங்குவதால் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது .தற்போது சமூக ஊடகங்களில் மக்கள் மூழ்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் சமூக விரோதிகள் சிலர் சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்தி வெறுப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஜாதி மத அரசியல் ரீதியாக மோதல்கள் ஏற்படும் வகையிலும் வீடியோக்கள் புகைப்படங்கள் கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன .
சமூக வலைதளங்களில் வரும் தகவல் உண்மையா? இல்லையா? என்பதை ஆராயாமல் அப்பாவி மக்களும் மற்றவர்களுக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் வதந்தி காட்டுத் தீ போல் பரவுகின்றன .பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற சம்பவம் இதற்கு உதாரணம் ஆகும்.
சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பதிவில் ஒருவர் மீது புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவோர் களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக போலீஸ் துறையில் சமூக ஊடக குழு தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது யூடியூப் ட்விட்டர் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து வதந்திகளை பரப்பி அதன் மூலம் குழப்பங்களையும் தடைகளையும் கலவரங்களையும் போலீசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கற்க வேண்டியது அவசியம் படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது அதுபோல இணைய வழியில் பாலியல் குற்றங்கள் போதைப்பொருள் விற்பனையை பண மோசடி போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டு பிடிக்கவும் தேவை ஏற்பட்டுள்ளது அதற்காக சென்னை உள்பட மாநகரங்களிலும் 32 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் போலீசார் கொண்ட சமூக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கணினி சார் திறன் ,சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற போலீசார் தேர்வு செய்யப்பட்டு இந்த குழுவில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இக்குழு சைபர் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு தலைமையின் கீழ் இயங்கும் .பொய்யான பதிவுகளை சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து அந்த பதிவுகளை நீக்கவும் ,அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும், கணினிசார் குற்ற வழக்குகளை பதிவு செய்வதற்கும் அஇக்குழு துரிதமாக செயல்படும். இந்த நடவடிக்கையின் மூலம் ஜாதி, மத, அரசியல் மோதல்களை தடுக்க உதவும் .
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
