Kathir News
Begin typing your search above and press return to search.

ட்விட்டரை வசப்படுத்திய தமிழக காவிகள் ட்ரண்டாகும் #vanakkam_Modi

ட்விட்டரில் தற்போது ட்ரெண்டாகும் புதிய இந்தியா தந்தை வருக வருக மோடி அவர்களின் ஹாஷ்டேக்.

ட்விட்டரை வசப்படுத்திய தமிழக காவிகள் ட்ரண்டாகும் #vanakkam_Modi

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 May 2022 10:09 AM GMT

சமூக வலைத்தளங்களை தற்போது பா.ஜ.க கட்சியினர் மிகவும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய ஓர் உதாரணமாக இன்றைய நாள் அமைந்து இருக்கிறது. ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தமிழகத்திற்கு சென்னையில் வருகை தந்த பல்வேறு வகையான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். குறிப்பாக 31,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி வைக்கிறார் என்று பா.ஜ.க தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.


எப்படி பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வெறுப்பவர்கள் #Go Back Modi என்ற சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆகி விட்டனர் முன்பு ஒரு காலத்தில், ஆனால் தற்போது அதைவிட அதிகமான அளவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்பதற்காக #Vanakkam மோடி என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம் அடைந்து இருக்கிறது.


தி.மு.க ஆட்சி அமைந்து அதில் இருந்த தற்போதுதான் முதன் முறையாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். மேலும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசின் சார்பில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மக்களும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வணக்கம் மோடி என்ற #ஹாஷ்டேக் பயன்படுத்தி பிரதமரை அன்போடு வரவேற்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News