Kathir News
Begin typing your search above and press return to search.

என்னை யாரோ கடத்தப்போறாங்க.. கூலிபடையால் உயிருக்கு ஆபத்து.. அலறும் வைகுண்டராஜன்.!

என்னை யாரோ கடத்தப்போறாங்க.. கூலிபடையால் உயிருக்கு ஆபத்து.. அலறும் வைகுண்டராஜன்.!

என்னை யாரோ கடத்தப்போறாங்க.. கூலிபடையால் உயிருக்கு ஆபத்து.. அலறும் வைகுண்டராஜன்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Nov 2020 4:28 PM GMT

மர்ம நபர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக வி.வி.மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜன் நெல்லை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், நான் பாளையங்கோட்டையில் வக்கீல் மகாராஜன் வீட்டில் இருக்கும்போது, எனது சகோதரர் ஜெகதீசன் நிறுவனத்தில் பணியாற்றும் மாரிகண்ணன் மற்றுமொருவர் பார்வையிட்டனர்.

அதில், மாரிகண்ணனை பிடித்து விசாரித்த போது, எனது சகோதரர் மகன் செந்தில் ராஜன் கூறி, புகைப்படம், வீடியோ எடுத்ததாகவும், இதற்காக கார், மோட்டார் சைக்கிள் என வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தப்பி சென்ற மற்றொருவரின் பெயர் நாகராஜன் என தெரிவித்தார். அவர் எடுத்த புகைப்படம், வீடியோக்களை முத்துகிருஷ்ணன், செந்தில்ராஜன் மற்றும் பலருக்கு அனுப்பி வருவதாகவும் கூறியுள்ளார்.

என்னை வேவு பார்ப்பதற்காக 19 பேரை நியமனம் செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. கடந்த 4.5 மாதமாக என்னையும், எனது குடும்பத்தினரையும் பின்தொடர்ந்து புகைப்படம், எடுத்து அனுப்ப வேண்டியது அவர்களின் வேலையாக உள்ளது.

மேலும், தான் தனியாக இருக்கும் இடத்தில் வைத்து என்னை கொலை செய்யவும் தனியாக ஒரு கூலி படையை செந்தில்ராஜன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஏற்பாடு செய்துள்ளதாகவும், இதனை அவர்கள் மேற்பார்வையிடுவது அவர்கள் தான் என கதறியுள்ளார். உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இவர் திமுகவினருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கும் வேலை என்பதால் அவரை கொலை செய்து விட்டு கலவரத்தை தூண்டவும் வாய்ப்புள்ளதாக பலர் பேசி வருகின்றனர். இல்லை தன்னை பற்றி பேச வேண்டும் என பொய்யாக புகார் அளித்தாரா என்பன போலீசார் விசாரணையில் தெரிய வரலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News