கீழடி அகழாய்வு பணிக்கு அதிநவீன கருவிகள்.!
கீழடி அகழாய்வு பணிக்கு அதிநவீன கருவிகள்.!
By : Kathir Webdesk
கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணியை முதலமைச்சர் தொடங்கி வைத்த நிலையில், ஆய்வுக்காக அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை தொல்லியல் துறையினர் பயன்படுத்த உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி, கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழர்களின் ஆதாரங்களை கொண்டுள்ளது. இதுவரை அங்கு ஆறு கட்ட அகழாய்வு நடைபெற்றுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் பல்வேறு கடடுமானங்கள் மற்றும் எச்சங்கள் கிடைத்துள்ளது.
மேலும், தமிழர்களின் தொழில் கூடாரமாகவும் கீழடி உள்ளது என கூறப்படுகிறது. இன்னும் பல்வேறு பழமையான பொருட்கள் கிடைக்கும் என்பதால் தற்போது 7ம் கட்ட அகழாய்வு பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 7ம் கட்ட அகழாய்வின்போது அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதில் தொன்மையான பொருட்கள் மற்றும் தமிழர்களின் பாரம்பரியம் அனைத்தும் கிடைக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.