Begin typing your search above and press return to search.
தென் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!
கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது

By : Thangavelu
தென்தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இதனால் கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது
Next Story
