சென்னை - திருப்பதி இடையே சிறப்பு ரயில் தொடக்கம்.!
சென்னை - திருப்பதி இடையே சிறப்பு ரயில் தொடக்கம்.!
By : Kathir Webdesk
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது போக்குவரத்தான ரயில் சேவைகள் முற்றிலும் முடங்கியது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா வீரியம் நாடு முழுவதும் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
சரக்கு ரயில் சேவைகள் மட்டும் தங்கு தடையின்றி நடைபெற்று வந்தது. அதே போன்று சென்னை, திருப்பதி இடையே சென்ற ரயில்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிற காரணத்தினால் பல இடங்களில் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
இந்நிலையில், சென்னை, சென்ட்ரல் மற்றும் திருப்பதி இடையே வரும் 19ம் தேதி முதல் தினசரி சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 19ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள, முழுமையான முன்பதிவு பெட்டிகளை கொண்ட சப்தகிரி ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை முதல் தொடங்குகிறது.