பழமையான கபாலீஸ்வரர் கோயில்: HR&CE துறையின் கையிலிருந்து ASI துறைக்கு மாற்றம்?
தமிழகத்தின் பழமையான கபாலீஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கையிலிருந்த இந்திய தொல்லியல் துறைக்கு மாற்றம்.
By : Bharathi Latha
தமிழ்நாடு கோவில் கலைகளுக்கு மிகவும் சிறப்பு பெற்று மாநிலமாக திகழ்கிறது. குறிப்பாக மிகவும் பழமையான மற்றும் தொன்மை மிக்க கோவில்கள் அதிகமாக உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. இவற்றை கவனிக்கும் மிகப்பெரிய பொறுப்பு தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை கையில் உள்ளது. ஆனால் மிகவும் பழமையான கோவில்களில் கனரக வாகனங்களை உள்ளே வரை இயக்கவும், மேலும் தொன்மையான கோவில்களில் இடிபாடுகளை அனுமதிக்கவும் தற்போது உள்ள HR&CE துறை செயல்படுகிறது. கோவில்கள் பழமையை பாதுகாக்க தவறி விடுவதால் பல்வேறு சமயங்களில் அவற்றை இந்தியத் தொல்லியல் துறை எடுத்துக் கொள்கிறது.
அந்த வகையில் தற்பொழுது சென்னையில் உள்ள மிகவும் பழமையான கபாலீஸ்வரர் கோயில் ஏற்கனவே போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவர்களின் மூலம் அளிக்கப்பட்ட கட்டப்பட்ட 400 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையானது. எனவே அத்தகைய கட்டிடங்கள் தற்பொழுது பல்வேறு இடிபாடுகளையும் கொண்டுள்ளன. எனவே இவற்றை காக்கத் தவறிய மற்றும் இடிபாடுகளை சரி செய்யாத வகையில் செயலாற்றிய இந்து சமய அறநிலையத்துறையின் கையிலிருந்து, இந்த கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டி. ஆர். ரமேஷ் அவர்கள் இதுபற்றி தெரிவிக்கையில், இந்த பழமையான கோவிலில் பொறுப்பற்ற முறையில் அழிவுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த கோவிலை இந்திய தொல்லியல் துறை கைப்பற்றியுள்ளது என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
Input & Image courtesy:Twitter Post