லண்டன் சுற்றுப்பயணம் செல்லும் முதல்வர் ஸ்டாலின் - என்ன திட்டம்?
வரும் ஜூன் மாதத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் லண்டன் சுற்றுப்பயணம் செல்ல முடிவு செய்துள்ளார்.

By : Mohan Raj
வரும் ஜூன் மாதத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் லண்டன் சுற்றுப்பயணம் செல்ல முடிவு செய்துள்ளார்.
தமிழகத்திற்கு தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்தநிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது நாளை மே 10'ம் தேதியுடன் முடிவடைவதால் அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் விவரங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக தலைமை செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி அடுத்த மாதம் ஜூன் முதல் வாரத்தில் லண்டன் செல்லவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் என அதிகாரிகள் வட்டம் தெரிவிக்கிறது. லண்டன் செல்லும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் காரணமாக முதலீட்டாளர்களை சந்திப்பார் எனவும் 20க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன அதிபர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்க தற்பொழுது தொடங்கி விட்டதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
