Kathir News
Begin typing your search above and press return to search.

வளர்ச்சி ரேஸில் பின் தங்கும் தமிழகம்! 95% நிதியை அள்ளிய டில்லி, பெங்களூரு, மும்பை ஸ்டார்ட் அப்கள் - சென்னை மிஸ்ஸிங்!

வளர்ச்சி ரேஸில் பின் தங்கும் தமிழகம்! 95% நிதியை அள்ளிய டில்லி, பெங்களூரு, மும்பை ஸ்டார்ட் அப்கள் - சென்னை மிஸ்ஸிங்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 July 2022 7:51 AM IST

தொழில்துறை சங்கமான நாஸ்காம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டிய ஸ்டார்ட்அப் கம்பெனிகள் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. அதில் 95சதவிகித நிதியை டில்லி, பெங்களூர், மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப்களே திரட்டியுள்ளன. மீத 5சதவிகித நிதியை தான் சென்னை, புனே, ஐதராபாத் போன்ற நகரங்களில் உள்ள ஸ்டார்ட் அப்கள் பெற்றுள்ளன.

திரட்டப்பட்ட சுமார் ரூ.51 ஆயிரம் கோடி நிதியில் பெரும்பகுதியை நிதி சார்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் ஈர்த்துள்ளன. ரூ.13 ஆயிரம் கோடி அளவிற்கு அந்நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து,

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஸ்டார்ட்அப்கள் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி

வணிக தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் சுமார் ரூ.8 ஆயிரம் கோடி

ரீடெயில் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் சுமார் ரூ.4,500 கோடி

கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி

சுகாதாரம் சார்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் ரூ.2,500 கோடி திரட்டியுள்ளன.

நிறுவனத்தின் மதிப்பு 100 கோடி டாலரை தாண்டினால் அவற்றை யுனிகார்ன் நிறுவனங்கள் என்பவர். அந்த வகையில் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 4 யுனிகார்ன் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்த எண்ணிக்கை 16 ஆக இருந்தது. தற்போது உலக பொருளாதார சிக்கல்களால் இந்திய ஸ்டார்ட்அப்களுக்கான நிதி குறைந்துள்ளது.

Input From: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News