ராக்கெட் வேகத்தில் உயர்ந்த கட்டுமான பொருட்களின் விலை.. கன்னியாகுமரியில் முடங்கிய 5,0000 கட்டட பணிகள்.!
தமிழகத்தில் செங்கல், சிமெண்ட், கம்பி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.

By : Thangavelu
தமிழகத்தில் செங்கல், சிமெண்ட், கம்பி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 50,000 கட்டட பணிகள் முடங்கியுள்ளன. சிமெண்ட், கம்பி, ஜல்லி, செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை 35 சதவீதத்தில் இருந்து 125 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் சுமார் 50,000 கட்டுமான பணிகள் முடங்கியுள்ளது.
இதனை நம்பியிருந்த பொறியாளர்கள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்றால் வீட்டில் முடங்கியுள்ள மக்களுக்கு கட்டுமான பொருட்களின் விலை உயர்வு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.