Kathir News
Begin typing your search above and press return to search.

தஞ்சாவூரில் ஏர்போர்ட் - வேற லெவல் பிளான் வைத்திருக்கும் மத்திய அரசு: தமிழக அரசு முறையாக ஒத்துழைக்குமா?

தஞ்சாவூரில் ஏர்போர்ட் - வேற லெவல் பிளான் வைத்திருக்கும் மத்திய அரசு: தமிழக அரசு முறையாக ஒத்துழைக்குமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2022 2:32 AM GMT

தஞ்சாவூரில் பொதுமக்களுக்கான விமான சேவை கொண்டுவரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என பார்லிமெண்டில் திமுகவின் எம்பி கல்யாணசுந்தரம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய விமானப்போக்குவரத்து துறையின் இணை அமைச்சரான வி.கே.சிங் பதில் அளித்தார். மத்திய அரசு கடந்த 2008 ஆம் ஆண்டிலேயே பசுமை விமானநிலையங்களுக்கானக் கொள்கையை அமைத்துள்ளது.

இதில், நாடு முழுவதிலும் பசுமை விமானநிலையங்கள் அமைப்பதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, விமானநிலையம் அமைக்க விரும்பும் மாநில அரசு, மத்திய விமானப்போக்குவரத்து துறைக்கு திட்ட அறிக்கையை அனுப்ப வேண்டும்.

இதன்படி அனுப்பப்படும் விண்ணப்பங்களை மத்திய விமானப் போக்குவரத்து துறை விதிமுறைகளின்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். தஞ்சாவூரை பொறுத்தமட்டில் இதுவரை எந்த விண்ணப்பங்களும் அரசிடம் வரவில்லை.

தஞ்சாவூரில் இந்திய விமானப்படையின் விமானநிலையம் ஏற்கனவே அமைந்துள்ளது. இதில், இந்திய விமானநிலைய அதிகார நிறுவனத்திற்கு 26.5 ஏக்கர் சொந்தமான நிலம் உள்ளது.

எனினும், இந்த நிலம் பொது விமானநிலையம் அமைக்க போதுமானதாக இல்லை. தஞ்சாவூரின் விமானநிலையம் அமைக்க இரண்டாம் கட்ட ஏலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில், விமானநிலையம் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்தார்.

Input From: HinduTamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News