ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்.. முதலமைச்சரை வலியுறுத்தும் குஷ்பு.!
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக வேட்பாளர் குஷ்பு ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
By : Thangavelu
இந்தியாவில் அதிகரித்து கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. பல்வேறு உயிர்களை காக்கும் வகையில், உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாஜக பிரமுகர் குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் பல்வேறு மாநிலங்கள் கொரோனா தொற்றின் பிடியில் உள்ளது. இதனால் பல்வேறு நோயாளிகளுக்கு மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன் தேவை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக வேட்பாளர் குஷ்பு ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், நமக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. உயிர்களை காப்பாற்றுவதற்காக ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்றால் அது நடக்கட்டும்.
பெருந்தொற்று காலத்தில் உயிர்களை காப்பதுதான் நம் முக்கிய நோக்கமாகும். ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.