Kathir News
Begin typing your search above and press return to search.

250க்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் ஸ்மார்ட் வகுப்பறை: ஸ்டெர்லைட் காப்பர் கல்வித் திட்டம்.!

தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் கல்வி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது.

250க்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் ஸ்மார்ட் வகுப்பறை: ஸ்டெர்லைட் காப்பர் கல்வித் திட்டம்.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 Dec 2021 3:03 PM GMT

இன்றைய குழந்தைகள் நாளைய எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்று கூறுவார்கள். அது போல இவர்களுடைய கல்விக்கு நாம் பல்வேறு நன்மைகளைச் செய்ய வேண்டும். அந்த வகையில் தற்பொழுது தூத்துக்குடி ராஜவின்கோவில் TNDTA தொடக்கப் பள்ளியில் ஸ்டெர்லைட் காப்பரால் வழக்கப்பட்ட தொழிலுட்பம் மாணவர்களை மேம்பட்ட கல்வி கற்றலுடன் தயார்படுத்துகிறது. இம்முயற்சியின் முக்கிய நோக்கம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக ஆக்குவதே ஆகும்.


மேலும் இந்த கிராம பஞ்சாயத்து துணை தலைவர் செல்வி பிரபா ஹெப்சி துவக்கி வைத்தார். 250க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த தொழில்நுட்பம் மூலம் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட் வகுப்பறை தொழில் நுட்பத்தின் மூலம் புகைப்படங்கள், வரைபடங்கள், வீடியோக்கள் வாயிலாக மாணவர்களுக்கு பாடங்களை விளக்கலாம். இது மாணவர்களுக்கு சுலபமாகவும், சுவாரஸ்யமாகவும், புரிந்துகொள்ள வழி வகுக்கிறது . இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.


மேலும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் முக்கிய திட்டமாக, தாமிர வித்யாலயம் இளைஞர்களின் கனவுகளை , அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்மபடுத்த தரமான கல்வியையும், கல்வி ஊக்கத்தொகைகையும் வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதன் மூலம் சுமார் 20ஆயிரம் குடும்பங்கள் பயனடைகின்றன. இந்த நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் காப்பர் COO திருமதி. A..சுமதி இதுபற்றி கூறுகையில், "ஸ்டெர்லைட், தூத்துக்குடி சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிபூண்டு செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூலம் 10,776 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினோம். வரும் ஆண்டுகளில் மாணவர்களுக்கான ஸ்டெர்லைட் கல்வித் திட்டம் 20, 000 மாணவர்களை சென்றடைவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம் " என்று கூறியுள்ளார்.


மேலும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஒரு பிரிவாக கொண்டுள்ள வேதாந்தா சமூக நலத் திட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகளின் ஊட்டச் சத்து குறைபாட்டை ஒழிப்பது, கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்களுக்கு திறன்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனில் அகர்வால் அறக்கட்டளையின் கீழ், வேதாந்தா குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஊட்டச்சத்து, பெண்கள்- குழந்தைகள் மேம்பாடு, சுகாதாரம், மற்றும் விலங்குகள் நலன் ஆகிய திட்டங்களின் மேம்பாட்டிற்காக 5000 கோடி ரூபாய் வழங்க உறுதியளித்துள்ளது.

Input & Image courtesy:Sterlitecopper



Next Story
கதிர் தொகுப்பு
Trending News