Kathir News
Begin typing your search above and press return to search.

புதிதாக உருவாகியது டவ்தே புயல்: தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவாகியுள்ளது. இந்த டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்க உள்ளது.

புதிதாக உருவாகியது டவ்தே புயல்: தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  15 May 2021 10:15 AM IST

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவாகியுள்ளது. இந்த டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்க உள்ளது.

இந்த புயலால் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத் மாநிலங்களில் தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே பேரிடர் மீட்பு படையினர் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் டவ்தே புயல் கரைரை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, மற்றும் கேரளா மாநிலங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News