Kathir News
Begin typing your search above and press return to search.

நாகை, கடலூர், எண்ணூர், பாம்பன் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை!

இந்த புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாகை, கடலூர், எண்ணூர், பாம்பன் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை!
X

ThangaveluBy : Thangavelu

  |  3 April 2021 6:04 PM IST

அந்தமான் கடல் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாகை, கடலூர், எண்ணூர், பாம்பன் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.




அந்தமான் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்றும், மீனவர்கள் 24 மணி நேரத்திற்கு வடக்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் மன்னார்வளைகுடா பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News