தெரு விரிவாக்கம் என்பதன் பெயரில் இடிக்கப்படும் 500 ஆண்டு பழமையான காளியம்மன் கோவில்!
தெரு விரிவாக்கம் என்பதன் பெயரில் 500 ஆண்டுகள் பழமையான விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் இடிப்பதற்கு தமிழக அரசு மற்றும் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.
By : Bharathi Latha
விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் வீற்றிருக்கும் வீற்றிருந்து அருள்பாவிக்கும் அருள்மிகு மகாகாளியம்மன் திருக்கோவில் மற்றும் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய இரு கோவில்களும் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் அந்த பகுதி மக்களால் குலதெய்வமாகவும், வழிபாட்டு தெய்வமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி பழமை வாய்ந்த கோவிலை இடிக்கும் நோக்கில் தமிழக அரசு மற்றும் மாநகராட்சி செயல்படுவதாக அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்கள்.
குறிப்பாக 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை தெரு விரிவாக்கம் என்கின்ற பெயரிலும், மெட்ரோ ரயில் பாதை அமைப்பதிலும் இக்கோவிலை சீர்குலைப்பதற்கு தமிழக அரசு மற்றும் மாநகராட்சி அரசாக முறையே மாநில வருவாய் துறை பதிவேட்டில் இதனால் வரை காளியம்மன் கோவில் மற்றும் சுந்தர வரதராஜர் பெருமாள் கோவில் பெயரிலேயே பட்டா எண் 119 மற்றும் 269 இருந்ததை திட்டமிட்டு இவர்கள் அரசு புறம்போக்கு நிலம் என்று சமூகத்தில் சமீபத்தில் பெயரை மாற்றி இருக்கிறது. புறம்போக்கு நிலம் என்றால் அந்த கோவிலை கட்டாயம் இடித்து விடலாம் என்பது அவர்களுடைய எண்ணம். ஆனால் மக்கள் இடம் ஆலயம் மீதும், கடவுள் மீதும் பக்தி இருக்கும் வரை அவ்விடத்தில் இருந்து கோயிலை அகற்ற முடியாது என்று பல்வேறு மக்கள் கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள்.
இந்த ஒரு செயலை அந்த பகுதி மக்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறார்கள். காளியம்மன் கோவில் புறம்போக்கு என்பதையும் மாற்றி திருக்கோவிலின் பெயருக்கு பட்டா வழங்கக்கோரி முறைப்படி அரசிடம் மனு அளித்தும், பல ஆண்டுக்கான இதற்கான ஒப்புதலை அரசு வழங்கவில்லை. இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதி 34 இன் படி, எந்த கோவில் பெயர் நில அடங்கில் பதிவாகி உள்ளபடி, அந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது. அதுபோல உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி பிரதான தொன்மையான எந்த ஒரு கோவிலும் சாலை விரிவாக்கம் அரசு திட்டங்களில் பாதிக்கப்படக்கூடாது மற்றும் தொன்மை சின்னங்கள் பாதிக்க கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் இந்த இரண்டு கோவில்களும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஆய்வு செய்து இவை தொன்மையானது என அறிக்கை ஒன்றையும் அளித்து இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு வருகின்ற 23 வெள்ளிக்கிழமை கோவிலில் அகற்ற போக்குவதாக மாநகராட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக பொதுமக்கள் சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Twitter Source