சிக்னல் இல்லை.. ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்பில் ஈடுபடும் மாணவர்கள்.!
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறு செல்போன் மூலமாக ஆன்லைன் வகுப்பில் ஈடுபடுகின்றனர்.

By : Thangavelu
ராசிபுரம் அருகே செல்போன் சிக்னர் இல்லாமல், மாணவர்கள் ஆபத்தை உணராமல், ஆலமரத்தின் மீது ஏறி ஆன்லைன் வகுப்புகளில் ஈடுபட்டு வரும் சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறு செல்போன் மூலமாக ஆன்லைன் வகுப்பில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், பெரப்பஞ்சாலை மற்றும் பெரியகோம்பை அதனை சுற்றியுள்ள கிராமங்களில் செல்போன் சிக்கன் சரியாக கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதனால் மாணவர்கள் ஆலமரம் மற்றும் உயரமான இடங்களில் ஏறி அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆபத்தை உணராமல் மாணவர்கள் மரங்களில் ஏறி, இறங்குவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே குறிப்பிட்ட கிராமங்களில் செல்போன் டவர்களை அமைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.