Kathir News
Begin typing your search above and press return to search.

Sufi Islamic Board வேண்டுகோளை ஏற்று, PFI அமைப்பின் பேரணிகளுக்கு தடை விதித்தது தமிழக காவல்துறை!

Sufi Islamic Board வேண்டுகோளை  ஏற்று, PFI அமைப்பின் பேரணிகளுக்கு தடை விதித்தது தமிழக காவல்துறை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 March 2022 7:32 AM GMT

தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பேரணிகள் நடத்த திட்டமிட்டிருந்த PFI அமைப்பிற்கு, அனுமதி மறுத்துள்ளது தமிழக காவல்துறை.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு, இந்த மாதம் தமிழகத்தின் காஞ்சிபுரம், சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் பேரணிகள் நடத்த திட்டமிட்டது. பேரணிக்கான அனுமதிகளை அந்தந்த பகுதி காவல் துறையினரிடம் PFI பெற்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் PFI அமைப்பு திட்டமிட்டிருக்கும் பேரணி நிகழ்ச்சிகளுக்கு, தமிழக காவல்துறை அனுமதிக்கக்கூடாது என்று Sufi Islamic Board என்ற இஸ்லாமிய அமைப்பு தமிழக டி.ஜி.பி'யிடம் கடிதம் மூலம் கூறியிருந்தது.




மேலும் கடிதத்தில், PFI அமைப்பு தேச விரோத செயல்களை அரங்கேற்றி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இக்கடிதத்தை ஏற்ற தமிழக டி.ஜி.பி, PFI சார்பில் நடத்தப்படும் பேரணிகளுக்கு அனுமதி மறுத்துள்ளார்.


Sufi Islamic Board அமைப்பின் தேசிய தலைவர் மன்சூர் கான் இது பற்றி கூறுகையில், எங்கள் அமைப்பு PFI அமைப்பை முற்றிலும் எதிர்க்கிறது. PFI அமைப்பை இந்தியாவில் தடை செய்ய நாங்கள் பெரும் முன்னெடுப்பு ஒன்றை எடுக்கப் போகிறோம் என்றும் கூறியுள்ளார்.

Opindia


Next Story
கதிர் தொகுப்பு
Trending News