ஆன்மீகவாதியும், சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் 96 நினைவு தினம்.. தருமபுரியில் எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் மரியாதை.!
தமிழகத்தில் உள்ள மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச் செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர் ஆவார். இவர் ஞானபாநு என்ற இதழை நடத்தி வந்தார். இதன் மூலம் விடுதலை போராட்டத்தை முன்னெடுத்தார்.

By : Thangavelu
சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் 96வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இன்று அதிமுக, பாமக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சுப்பிரமணிய சிவா 4 அக்டோபர் 1884ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் பிறந்தார். இவர் ஜூலை 23 1925ம் ஆண்டு பாப்பாரப்பட்டியில் மறைந்தார். இவர் 1884 மற்றும் 1925ம் ஆண்டின் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர் ஆவார். இவர் அரசியலையும் மற்றும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் கடைசி மூச்சு வரை பாடுபட்டவர்.
தமிழகத்தில் உள்ள மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச் செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர் ஆவார். இவர் ஞானபாநு என்ற இதழை நடத்தி வந்தார். இதன் மூலம் விடுதலை போராட்டத்தை முன்னெடுத்தார்.
இந்நிலையில், சுப்பிரமணிய சிவாவின் மறைவு மற்றும் இறப்பு நிகழ்ச்சியை அரசு விழாவாக கொண்டாடுகிறது. இதற்காக தமிழக அரசு தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் நினைவு மண்டபம் கட்டியுள்ளது.
ஆண்டுதோறும் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் தருமபுரி மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும், பாலக்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.பி.அன்பழகன் மற்றும் பாமக எம்.எல்.ஏ., ஜி.கே.மணி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் சுப்பிரமணிய சிவாவின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
