ஜூலை 31 வரை ஸ்டெர்லைட் ஆலை திறந்திருக்க உச்சநீதிமன்றம் ஆணை.!
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு வேதாந்தா நிறுவனம் அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
By : Thangavelu
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஜூலை 31ம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலையின் தாக்கத்தால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு வேதாந்தா நிறுவனம் அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இது பற்றி தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஆலையை தற்காலிகமாக திறக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்ட நிலையில், கண்காணிப்புக் குழுவின்கீழ் ஆலை தற்காலிகமாக இயங்கும் என கூறப்பட்டது. இதனிடையே ஆக்சிஜனை பிரித்தளிக்கும் பொறுப்பை மத்திய அரசிடம் வழங்கி உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஜூலை 31 வரை மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை திறந்திருக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.