கரை புரண்டோடும் காவிரி ஆறு! வறண்டு கிடக்கும் கடைமடை! 1.25 லட்சம் கனஅடி வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!
By : Thangavelu
காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் கடைமடை வாய்க்கால் வறண்டு கிடப்பதால் 1.25 லட்சம் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது என்று விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் இருபுறங்களின் கரையை தொட்டப்படி தண்ணீர் ஓடுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அதில் இருந்து சுமார் 1.25 லட்சம் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கடைமடை பகுதிகளில் உள்ள வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் தடுப்பணைகளை கட்டி தண்ணீர் சேமித்து வைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: News 18 Tamilnadu