கோயில்களின் இணையதள சேவையில் இந்து சமய அறநிலையத்துறை கோடிக்கணக்கில் ஊழல்? முதலமைச்சர் கண்டுகொள்வாரா!
தமிழக கோயில்களில் இணையதள இணைப்பு ஏற்படுத்துவதாக கூறி பல லட்சக்கணக்கான ரூபாய்கள் ஊழல் நடைபெறுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு வைத்துள்ளது.
By : Thangavelu
தமிழக கோயில்களில் இணையதள இணைப்பு ஏற்படுத்துவதாக கூறி பல லட்சக்கணக்கான ரூபாய்கள் ஊழல் நடைபெறுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு வைத்துள்ளது.
இந்து சமய திருக்கோயிலின் நிர்வாகத்தை பராமரிப்பு என்ற பெயரில் 1925-ஆம் ஆண்டில் 'இந்து சமய அறநிலைய வாரியம்' ஏற்படுத்தப்பட்டது. இந்து திருக்கோயில்கள் அறநிறுவனங்கள் மற்றும் திருமடங்கள் வாரியத்தால் கண்காணிக்கப்பட்டு வந்தது. 1951ல் இந்து சமய அறநிலைய வாரியம் கலைக்கப்பட்டு அரசுத் துறையாக செயல்பட வழிவகை செய்யப்பட்டது. 1959-ஆம் ஆண்டிலிருந்து அமலில் இருந்த இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் நடைமுறைபடுத்துவதில் சில இன்னல்கள் ஏற்பட்டது.
இதனை சரி செய்யவும் பல்வேறு திருத்தங்களை ஒருங்கிணைக்கவும் 1959-ஆம் ஆண்டில் இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் 22/1959 இயற்றப்பட்டது. 01.01.1960 முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1959-ஆம் ஆண்டு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தில் காலத்திற்கேற்ப சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இச்சட்டத்தின் மூலம் நிர்வாகத்தினை விரிவுபடுத்தி ஆணையர் மற்றும் சார்நிலை அலுவலர்களின் அதிகார வரம்புகளை வரையறுத்து திருக்கோயில்கள் மற்றும் அறநிறுவனங்களை கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை இணையதளங்களில் இத்தகவல் பதிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக அரசு அமைந்த பின்னர் தமிழகம் முழுவதும் இருக்கின்ற இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் இணையதளம் மூலமாக அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். அதன்படி தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் சில நாட்களில் அந்த இணையதள சேவைகள் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் ஏற்கனவே இணையவழிச் சேவைகள் மற்றும் தொடர்புகள் இருக்கிறது. கோயில்கள் பற்றிய அனைத்து தரவுகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து வகையிலான தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதற்காக அண்ணா சிலக்கான் என்ற தனியார் நிறுவனம் சேவைக் கட்டணமாக ஆண்டுதோறும் ரூ.18 ஆயிரம் வசூல் செய்கிறது. ஆனால் தற்போது திமுக அரசு அமைந்த பின்னர் கோயில்களில் இணையதளம் மூலமாக இணைக்கின்ற பெயரில் நெல்லையப்பர் கோயிலில் மட்டும் சுமார் 5 லட்சம் ரூபாய் இந்து சமய அறநிலையத்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது 18 ஆயிரம் ரூபாய் ஆண்டு பராமரிப்பு செலவு செய்து வந்த நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் தற்போது ரூ.5 லட்சம் செலவு செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. அண்ணா சிலிக்கான் நிறுவனம் ஏற்கனவே பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களில் குறைந்த சேவை கட்டணத்தில் இணைதள வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. தற்போது அந்த கோயில்களுக்கும் இதே நிலைமைதான் உள்ளது. இணையதள இணைப்பு ஏற்படுத்துவதாக கூறி ஒவ்வொரு கோயில்களிலும் பல லட்சங்கள் ரூபாய் வசூல் செய்யப்பட்டு பல கோடிக்கணக்கான பணம் ஊழல் செய்ய வேலைகள் நடைபெற்று வருகிறது என்ற சந்தேகத்தை பக்தர்கள் எழுப்பி வருகின்றனர்.
அதாவது ஒரு இணையதளம் தொடங்க வேண்டும் என்றால கூட 18 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை மட்டுமே ஆகும். ஆனால் தற்போது திமுக அரசு ஒவ்வொரு கோயில்களுக்கும் 5 லட்சம் ரூபாய் வசூல் செய்ய வேண்டிய காரணம் ஏன் இந்து சமய அறநிலையத்துறைக்கு வந்தது. தற்போது கோயில்களிலும் திமுக அரசு விஞ்ஞான ரீதியிலான ஊழல் செய்ய பார்க்கிறதா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்துக்களின் பணம் திருடுபோவதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்துக்களும் கோரிக்கை வைக்கின்றனர். இனிமேல் ஆவது இந்துக்களின் கோயில்களை அரசு விடுவிக்க வேண்டும். அவரவர்கள் கோயில்களை நிர்வாகம் செய்து சிறப்புடன் நடத்தி வந்தனர். ஆனால் இந்து சமயஅறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டு பல கோடிகள் ஊழல் நடைபெறுவதற்கு வழிவகுக்கிறது.
சிவன் சொத்து குலநாசம். இவை அனைத்தும் திமுக அரசு புரிந்து கொண்டு நடந்தால் நல்லது.
Source: Dhinasari Seithigal
Image Courtesy:Tirunelveli.in