இன்றுடன் நிறைவடையும் தமிழக சட்டப்பேரவை.!
தமிழகத்தில் புதிதாக திமுக ஆட்சி அமைந்த முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

By : Thangavelu
தமிழகத்தில் புதிதாக திமுக ஆட்சி அமைந்த முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். இதனிடையே 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், சட்டப்பேரவை தலைவர், எம்.எல்.ஏ. க்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பியது. தேர்தல் வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படுவீர்கள் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் (ஜூன் 24) நிறைவடைகிறது. இதில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றுகிறார்.
