கொரோனா காலத்திலும் ரூ.60,674 கோடி முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம்.. ஆளுநர் பாராட்டு.!
கொரோனா காலத்திலும் ரூ.60,674 கோடி முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம்.. ஆளுநர் பாராட்டு.!
By : Kathir Webdesk
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் பேரவை கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் பேரவைக்கூட்டத்தொடர் தொடங்கியது.
கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, திமுக தலைவர் ஸ்டாலின், மற்றும் துரைமுருகன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையை விட்டு வெளியேறினார்கள். இதனிடையே ஆளுநர் உரையாற்றியதாவது: தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே தொடரும். கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தமிழகம் ரூ.60,674 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது. முதலமைச்சருக்கு பாராட்டுக்கள்.
மேலும், தமிழகம் தொடர்ந்து 3 முறை நல்லாளுமை விருதை பெற்றுள்ளது. இது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான நிர்வாகத்தை பறைசாட்டுகிறது. தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கியது தொலை நோக்கு பார்வை திட்டம் ஆகும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை தமிழக அரசு உறுதி செய்யும்.
மேலும் தமிழக விவசாயிகளின் பயிர் காப்பீடு திட்டத்திற்கான கூடுதல் செலவை அரசு ஏற்றுள்ளது. மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளித்திருப்பது மிகப்பெரிய சாதனை ஆகும் என்று பேரவை உரையில் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.