தமிழக முதல்வர் - பிரதமர் மோடி பரபரப்பு பேச்சுவார்த்தை : நிவர் புயல் உயிரிழப்புக்கு மத்திய அரசு ரூ. 2 லட்சம் நிதியுதவி.!
தமிழக முதல்வர் - பிரதமர் மோடி பரபரப்பு பேச்சுவார்த்தை : நிவர் புயல் உயிரிழப்புக்கு மத்திய அரசு ரூ. 2 லட்சம் நிதியுதவி.!
By : Muruganandham M
தமிழகத்தை நிவர் புயல் தாக்கியதை தொடர்ந்து, அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தினார். சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்த பிரதமர், நிவாரண நிதி ஒதுக்குவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ஆலோசனையின் இறுதியில். தமிழகத்தில் நிவர் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பாரதப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டப்பட்டுள்ளது.
அதில், நிவர் புயல் பாதிப்புகள் மற்றும் அது சார்ந்த நிகழ்வுகள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
நிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்ச ரூபாய் நிதியுதிவியாக வழங்கப்படும். அதேபோல், புயல் பாதிப்பால் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு சிகிச்சை செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல தமிழக அரசு சார்பில் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.