கொரோனா ஆய்வுக்கு செல்லும்போது ஆடம்பர உணவுகள் வேண்டாம்: கலெக்டர்களுக்கு தலைமைச்செயலாளர் சுற்றறிக்கை.!
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது சில மாவட்டங்களில் தடல், புடல் விருந்துகள் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு சுற்றரிக்கை அனுப்பியுள்ளார்.
By : Thangavelu

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஆய்வின்போது ஆடம்பர உணவுகள் ஏற்பாடு செய்ய வேண்டாம்.
தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், ஆய்வின்போது ஆடம்பர உணவுகள் வேண்டாம் என தற்போது மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதத்தின் மூலமாக வலியுறுத்தியுள்ளார். அதில் ஆய்வு செய்ய வரும்போதும் மாவட்ட நிர்வாகத்தினர் ஆடம்பர உணவுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம். காலை, இரவு நேரங்களில் எளிய உணவும், மதியம் இரண்டு காற்கறிகளுடன் கூடிய சைவ உணவும் போதும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.