தமிழக கூட்டுறவு வங்கியின் நடைமுறை மூலதனம் ரூ.4,500 கோடியாக உயர்வு! தனியார் வங்கிகளுக்கு நிகரான வசதிகள்!
தமிழக கூட்டுறவு வங்கியின் நடைமுறை மூலதனம் ரூ.4,500 கோடியாக உயர்வு! தனியார் வங்கிகளுக்கு நிகரான வசதிகள்!
By : Muruganandham M
கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகள் மூலம் 2011 முதல் 31.12.2021 வரை 6,60,52,332 நபர்களுக்கு, 2 லட்சத்து 64 ஆயிரத்து, 464.66 கோடி ரூபாய் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் 3 அடுக்கு முறையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் என்ற அமைப்பில் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளின் வேளாண் கடன் தேவைகளையும், பொது மக்களின் அவசர கடன் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது.
தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று மாநிலத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்தியாவின் எந்த பகுதிக்கும் நிதிமாற்றம் செய்யும் வகையில், மைய வங்கியியல் சேவை, நிகழ்நேர மொத்தத் தீர்வு முறை, தேசிய மின்னணு நிதி பரிமாற்றம்ஆகிய வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, குறுஞ்செய்தி வசதி அலைபேசி வங்கியியல் சேவை, இணையதள வங்கிச் சேவை, உடனடி கட்டணச் சேவை வசதி ஆகிய வசதிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவைகளை வழங்கி வருகிறது.
தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விதமான சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதுடன், இவ்வங்கிகள் குளிர்சாதன வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் வழங்கிய கடன்கள் ரூ.5,000 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. வங்கியின் நடைமுறை மூலதனம் 2020-21-ம் ஆண்டில் ரூ.4,500 கோடியாக உயர்ந்துள்ளது. 968 சிறு வணிகர்களுக்கு ரூ.4 கோடி அளவிற்கு சிறு வணிக கடன் வழங்கப்பட்டுள்ளது.