Kathir News
Begin typing your search above and press return to search.

மனிதநேயத்துடன் பொதுமக்களிடம் நடக்க வேண்டும்: போலீசாருக்கு புதிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுரை.!

சட்டம், ஒழுங்கை பராமரிக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும். குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பொதுமக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடக்க வேணடும். அனைத்து போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மனிதநேயத்துடன் பொதுமக்களிடம் நடக்க வேண்டும்: போலீசாருக்கு புதிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுரை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  30 Jun 2021 1:06 PM IST

தமிழகத்தில் குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று டிஜிபியாக பொறுப்பேற்றுக்கொண்ட சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம் செய்யப்பட்டார். இன்று அவர் (ஜூன் 30) தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் அவர் கூறியதாவது: காவல்துறையின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்வது அரிய வாய்ப்பு. இதனை ஏற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டம், ஒழுங்கை பராமரிக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும். குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பொதுமக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடக்க வேணடும். அனைத்து போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News