பேராசிரியர்களை கல்லூரிக்கு வரவழைக்க கட்டாயப்படுத்தக்கூடாது.. தமிழக அரசு உத்தரவு.!
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக 15 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வெளியில் வருவதற்கு அச்சம் கொண்டுள்ளனர்.

By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்று நேரத்தில் கல்லூரிக்கு வருவதற்கு ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக 15 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வெளியில் வருவதற்கு அச்சம் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பேராசிரியர்களை எந்த காரணம் கொண்டும் கல்லூரிக்கு நேரில் வருவதற்கு கட்டாயப்படுத்தகூடாது என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்கு பேராசிரியர்களை கல்லூரிக்கு வரவேற்பதாக புகார் எழுந்த நிலையில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகிகளுக்கும் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால் ஆன்லைன் வகுப்புகளை வீட்டிலிருந்தபடியே நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பணிகள் மற்றும் கல்லூரிகள் சார்ந்த பணிகளுக்காகவும் ஆசிரியர்களை கல்லூரிக்கு வரவழைக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
