தமிழக இடைக்கால பட்ஜெட்.. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார்.!
தமிழக இடைக்கால பட்ஜெட்.. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார்.!
By : Kathir Webdesk
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த 2ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து 3 நாட்கள் பேரவை நடைபெற்றது. அதில் விவசாயிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், 2021 -2022ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை நாளை (23ம் தேதி) மீண்டும் கூடுகிறது.
கொரோனா தொற்று காரணமாக தலைமை செலயகத்திற்கு பதிலாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த முறையும் அங்கேயே இடைக்கால பட்ஜெட் கூட்டம் நடைபெறுகிறது.
காலை 11 மணியளவில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தற்போது அவர் தாக்கல் செய்யும் பட்ஜெட் 10வது முறையாகும். இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளிவர வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக மகளர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என தெரிகிறது. அது மட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.