Kathir News
Begin typing your search above and press return to search.

2 முறை நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவி, மருத்துவக் கனவுக்கு தமிழக அரசு கை கொடுக்குமா? ஆதரவு கரம் நீட்டிய அண்ணாமலை!

2முறை நீட் தேர்வில் வெற்றி பெற்றும், குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக விவசாயத்தை பார்க்க வேண்டிய நிலையில் உள்ள மாணவி.

2 முறை நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவி, மருத்துவக் கனவுக்கு தமிழக அரசு கை கொடுக்குமா? ஆதரவு கரம் நீட்டிய அண்ணாமலை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  31 Jan 2022 11:52 AM GMT

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகிலுள்ள பனமூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி தங்கப்பேச்சி தற்போது இரண்டாவது முறையாக நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய குடும்பம் முழுக்க, முழுக்க விவசாயத்தை பின்னணியாகக் கொண்ட குடும்பம் ஆகும். இவருடைய பெற்றோர்களான சன்னாசி, மயில்தாயி என்பவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள். இவர்கள் விவசாயத்தில் கூலி வேலை செய்து தன்னுடைய நான்கு மகள்களையும் படிக்க வைத்து வருகிறார்கள். இவர்களின் மூத்தவரான தங்கப்பேச்சி தற்பொழுது நீட் தேர்வில் இரண்டு முறை வெற்றி பெற்றும், பொருளாதார சூழ்நிலை காரணமாக அவரால் கடந்த ஆண்டு மருத்துவக் கனவை நிறைவேற்ற முடியவில்லை.


நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு வாய்ப்புகள் கிடைத்தும் விடுதி கட்டணம் போன்ற பலவற்றுக்கு நாங்கள் செலவழிக்கும் தொகை அதிகமாகும் என்ற காரணத்தினால் தற்போது மருத்துவராகும் தன்னுடைய கனவு கேள்விக்குறியாக? இருப்பதாகவும் மாணவி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக தங்கப்பேச்சி கூறுகையில், "எனது கல்விக் கட்டணத்தை மட்டுமே அரசு செலுத்துகிறது. தங்குமிடம் போன்ற பிற செலவுகளுக்கு என்னிடம் பணம் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில், நான் மீண்டும் விவசாயத்தைத் தொடங்க வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார்.


எனவே தமிழக அரசு மாணவிக்கு உதவுமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்களும் தொடர்ச்சியான வண்ணம் எழுப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 2020 இல், அவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ படிப்புக்கான செலவு அதிகரிக்கும் என்ற காரணத்தினால் படிப்பைத் தொடர முடியாமல் விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் விவசாய பணிகளுக்கு இடையே தொடர்ந்து முயற்சி செய்து, தற்போது இந்த வருடமும் 2021 ஆம் ஆண்டு 256 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற அவருடைய மருத்துவம் கனவு நிறைவேறுமா? தமிழக அரசு இவருடைய இந்த கோரிக்கையை நிறைவேற்றுமா?

"மாணவி தங்கப்பேச்சியின் மருத்துவ கனவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே இது சாத்தியமானது, இதுவே உண்மையான சமூக நீதி ஆகும்"என்று தமிழக பா.ஜ.க தலைவர் திரு அண்ணாமலை அவர்களும் தங்கப்பேச்சியின் மருத்துவக் கனவுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

Annamalai tweet

Input & Image courtesy: Times of India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News