"புதுச்சேரி மாநிலத்தில் கோவில்கள் திறந்து தான் உள்ளன,தமிழக அரசு இந்த விஷயத்தில் மறுபரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும்" - தமிழிசை சௌந்தர்ராஜன் !
By : Dhivakar
"புதுச்சேரி மாநிலத்தில் கோவில்கள் எல்லாம் திறந்து தான் உள்ளன தமிழக அரசு இந்த விஷயத்தில் முடிவை மறுபரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும்" என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தீனதயாள் சேவை மையம், உலக கலை விளையாட்டு கூட்டமைப்பு, மதுரை ஜெயபிரபா ஜுவல்லரி ஆகியவை இணைந்து தென் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகளை நடத்தியது. இதற்கான பரிசளிப்பு விழா மதுரையில் நடந்தது. இந்த விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி. பேசியதாவது :
புதுச்சேரி மாநிலத்தில் கோவில்கள் எல்லாம் திறந்து தான் உள்ளன. மதுரை தெப்பக்குளம் சென்றால் மாரியம்மனை வழிபடாமல் சென்றது இல்லை. ஆனால் இன்றைக்கு மதுரை வந்தும், தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு செல்ல முடியவில்லை.
எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் முடிவை மறுபரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து."
என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
Image : Hindu Tamil