வாட்ஸ் அப்'பில் ஆபாச செய்திகள் அனுப்பி, மாணவிகளுக்கு தொல்லை தந்த C.S.I பள்ளி தலைமையாசிரியர்! மௌன விரதத்தில் தமிழக ஊடகங்கள் !
By : Kathir Webdesk
திருநெல்வேலியில் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவியிடம், தென்னிந்திய திருச்சபைக்கு உட்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை பகுதியில் சமாரியா செயிண்ட் ஜான் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி தென்னிந்திய திருச்சபைக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி ஆகும். இப்பள்ளியில் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் (51) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
பள்ளியின் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் செப்டம்பர் மாதம் முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களை சிறப்பு வகுப்பிற்காக பள்ளிக்கு வருமாறு கேட்டுள்ளார். அதற்காக தவறான தகாத குறுஞ்செய்திகளை பள்ளி மாணவிகளுக்கு அனுப்பியுள்ளார்.
மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் அவர் குறித்து கூறியபோதும், எந்த ஒரு நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் அவர் மீது எடுத்ததாக தெரியவில்லை. தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் மாணவிகளின் பெற்றோர்களிடம் இச்செய்தியை வெளிக்கொண்டுவர வேண்டாம் என்பதற்காக லட்சக்கணக்கில் பேரம் பேசியதாக தெரிகிறது.
கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது மானிவர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கிறிஸ்டோபரை தென்னிந்திய திருச்சபை நிர்வாகம் மூலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அன்று முதல் இப்பொழுது வரை கிறிஸ்டோபர் தலைமறைவாகியுள்ளார்.