Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 July 2021 3:08 PM IST

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் மழைக்காலம் கடந்த சில நாட்களாக தொடங்கிவிட்ட நிலையில், நீலகிரி, கோவை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே போன்று சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.


இந்நிலையில், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை நீடிக்கலாம் என வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News