Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் 100 இடங்களில் சித்த மருத்துவ மையம் அமைக்கப்படும்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரமடைந்துள்ளது. இதனால் மருத்துவனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
By : Thangavelu
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரமடைந்துள்ளது. இதனால் மருத்துவனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனிடையே சித்த மருத்துவத்தில் பல்வேறு கொரோனா நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர். இத்திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 10 நாட்களில் 100 இடங்களில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட 100 படுக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.
Next Story