Begin typing your search above and press return to search.
தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை இன்று கூடுகிறது.. புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு.!
தமிழகத்தில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

By : Thangavelu
தமிழகத்தில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்குகிறது. இதில் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களும் முறைப்படி பதவியேற்க உள்ளனர். அனைவரும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கொண்டுவர வேண்டும் என சட்டப்பேரவை செயலாளர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story