Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

By : Thangavelu
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்து 24 மணி நேரத்திற்கு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என கூறியுள்ளது.
மேலும், நாளை முதல் 4 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மீனவர்கள் வருகின்ற 5 நாட்களுக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story