Begin typing your search above and press return to search.
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை.!
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

By : Thangavelu
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகின்ற 21ம் தேதி வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது.
இதன் காரணமாக மத்திய, மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பகுதிகள், மேற்கு கடல் பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும், ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Next Story